Connect with us

நான் சிந்திய சிறு கண்ணீர்துளிகளைத் தரையில் விழவில்லை…மாநாடு பட வெற்றிக்கு சிம்பு கொடுத்த அறிக்கை…

Cinema News

நான் சிந்திய சிறு கண்ணீர்துளிகளைத் தரையில் விழவில்லை…மாநாடு பட வெற்றிக்கு சிம்பு கொடுத்த அறிக்கை…

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு படம் தமிழ்நாடு முழுவதும் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி முதல் ரிலீசாகி ரசிகர்கள் தியேட்டர்களில் படத்தை ரசித்து வருகின்றனர். டைம் லூப் படம் சுவாரஸ்யமாக இருப்பதால் படம் முழுவதும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சிலம்பரசன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர், அதே நேரத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு பிளாக்பஸ்டரை அடிக்க தீவிரமாக உழைத்துள்ளார்.

மேலும் படம் கடந்த 4 நாட்களில் மட்டும் 30 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மாநாடு படத்தை சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படத்தை பாராட்டி ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர் .

Image

இந்நிலையில் நடிகர் சிம்பு மாநாடு பட வெற்றி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.அதில் குறிப்பிட்டு இருப்பதாவது,ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகளைத் தரையில் விழவிடாமல் தாங்கிக்கொண்ட உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.

மேலும் நேற்றைய தினம் , மாநாடு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை படக்குழுவினர் ஒன்றாக இணைந்து கொண்டாடிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More in Cinema News

To Top