Connect with us

மாநாடு பட பிளாக்பஸ்டர் வெற்றி கொண்டாட்டம்…கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன சிம்பு -வைரல் வீடியோ

Cinema News

மாநாடு பட பிளாக்பஸ்டர் வெற்றி கொண்டாட்டம்…கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன சிம்பு -வைரல் வீடியோ

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு படம் தமிழ்நாடு முழுவதும் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி முதல் ரிலீசாகி ரசிகர்கள் தியேட்டர்களில் படத்தை ரசித்து வருகின்றனர். டைம் லூப் படம் சுவாரஸ்யமாக இருப்பதால் படம் முழுவதும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சிலம்பரசன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர், அதே நேரத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு பிளாக்பஸ்டரை அடிக்க தீவிரமாக உழைத்துள்ளார்.மேலும் படம் கடந்த 4 நாட்களில் மட்டும் 30 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மாநாடு படத்தை சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படத்தை பாராட்டி ரஜினி மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர் .

Venkat Prabhu reaction for Maanadu is the copy of korean movie news - தமிழ்  News - KARKEY

இந்நிலையில், மாநாடு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை படக்குழுவினர் ஒன்றாக இணைந்து கொண்டாடி உள்ளனர். அப்போது எடுத்த வீடியோவை இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்பட அனைவரும் நன்றி என உற்சாகம் ததும்ப கத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More in Cinema News

To Top