உச்சக்கட்ட பயத்தில் கமலை குறி வைக்கும் திமுக – மக்கள் நீதி மய்யம் முருகானந்தம் கடும் கண்டனம்

0
315

பாஜகவின் B டீம் மக்கள் நீதி மய்யம் தான் என திமுக தெரிவித்துள்ளது இதற்கு மக்கள் நீதி மய்யத்தின் திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் எம்.முருகானந்தம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் .

நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் திரு எம்.முருகானந்தம் அவர்கள் போட்டியிடுகிறார் .

அன்மையில் மக்கள் நீதி மய்யத்தை பற்றி அவதூறு கருத்துக்களை திமுக பரப்பி வருகிறது . இதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர்களும் அடிப்படை தொண்டர்களும் அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர் . அந்த வகையில் பாஜகவின் B டீம் மக்கள் நீதி மய்யம் தான் என திமுக தெரிவித்துள்ளது இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு எம்.முருகானந்தம் அவர்கள் கூறியதாவது மக்கள் நீதி மய்யம் நேர்மையாகவும் உண்மையாகவும் மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறது உண்மையில் பாஜகவின் B டீம் திமுக தான் உச்சகட்ட பயத்தில் கமல் அவர்களை குறி வைத்து தாக்குகிறது திமுக என தெரிவித்துள்ளார் .