கொரோனா ஊரடங்கு உத்தரவு வரும் ஜூன் 1ந்தேதி வரை நீட்டிப்பு….அதிரடி முதல்வர்

0
68

கொரோனாவின் இரண்டாவது அலை தற்பொழுது அதிகரித்து வருகிறது.மேலும் தமிழ்நாடு,கேரளா உள்ளிட்ட 16 மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 46,781 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. எனினும், 58,805 பேர் குணமடைந்தது ஆறுதல் ஏற்படுத்தி உள்ளது. ஒரே நாளில் 816 பேர் உயிரிழந்து உள்ளனர்.இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா உயர்வால் கடந்த 1ந்தேதி முதல் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த சூழலில் கொரோனா பாதிப்புகளை குறைக்க மராட்டியத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு வருகிற ஜூன் 1ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, மராட்டியத்திற்குள் வருபவர்கள் ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்றில்லாத சான்றிதழை உடன் கொண்டு வரவேண்டும். இந்த சான்றிதழ் மராட்டியத்திற்கு வருவதற்கு 48 மணிநேரத்திற்குள் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.