மகாராஷ்டிராவில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!கூடவே இந்த மாநிலங்களிலும் நீட்டிப்பு

0
122

கொரோனா பரவல் காரணமாக இரு மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. ஐந்தாம் கட்ட பொது முடக்கம் பல்வேறு தளர்வுகளுடன் UNLOCK1.0 என்ற பெயரில் வருகிற 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்கு பின் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விகள் பரவலாக எழுந்து வருகிறது.

இந்த சூழலில், நாடு முழுவதும் அமலில் உள்ள பொது முடக்கம், தமிழகத்தின் சில பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தை பொறுத்தவரை ஓவ்வொரு முறையும் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து அறிவிப்புக்கு முன்னர், மருத்துவ குழுவின் ஆலோசனையின் பேரிலேயே முதல்வர் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில்,தற்பொழுது மகாராஷ்டிர மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது .

மேற்குவங்காளம், மணிப்பூர் மாநிலங்களையடுத்து மகாராஷ்டிராவிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.