General News
புதிய சிந்தனைகளின் அரசன் ”மகாகவி நாளில்” நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை -இதோ
மகாகவி சுப்ரமணிய பாரதியார் நமது பள்ளிப்பருவத்தில் நிச்சயமாக பிடித்த கவிஞர்களில் ஒருவர் . அவரது பாடலை பாடும் போதோ ,கவிதைகளை வாசிக்கும் போதோ எங்கிருந்து தான் நமக்கு ஒரு தன்னம்பிக்கையும் ,துணிச்சலும் வருமோ தெரியாது.பாரதியார் அவர் இருந்த காலத்தில் அவரது புதிய சிந்தனைகளை பார்த்து கேளிக்கை செய்திருக்கலாம்,ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் எதிர்கால உலகு வளம் பெற புதிய சிந்தனைகளை விதைத்திருக்கும் மகாகவி.
பிரிந்து கிடக்கும் சமூகத்தால் வெற்றி பெற முடியாது என்பதை மகாகவி பாரதியார் புரிந்து கொண்டு , அதே சமயத்தில், சமூக சமத்துவமற்ற நிலையில், சமூகக் கொடுமைகளுக்குத் தீர்வு காணாத நிலையில் அரசியல் சுதந்திரம் பெறுவதால் மட்டும் பயனில்லை என்று அவர் எழுதியுள்ளார்.
இனியொரு விதி செய்வோம் – அதை
எந்த நாளும் காப்போம்
தனியொரு வனுக்குணவிலை யெனில்
ஜகத்தினை யழித்திடுவோம்
இனியொரு விதி செய்வோம் – அதை
எந்த நாளும் காப்போம்
தனியொரு வனுக்குணவிலை யெனில்
ஜகத்தினை யழித்திடுவோம்
மகாகவி பாரதி வெறும் 39 ஆண்டுகள் என்ற குறுகிய வாழ்நாளில் அவர் எழுதி இருப்பது ஏராளம்.பழையதும் , புதியதும் இணைந்த ஆரோக்கியமான கலவையில் பாரதியார் நம்பிக்கை கொண்டிருந்தார்.ஆனால், அதே சமயம், கடந்த கால பெருமைகளைக் கூறி மட்டும் வாழ்வது போதாது என அவர் நம்மை பெரிதளவில் அவரது கவிதைகள் மூலம் எச்சிரித்து இருந்தார் .
ஓவ்வொரு மனிதரையும், குறிப்பாக ஏழைகள், ஒக்கப்பட்ட பிரிவினர் அதிகாரம் பெறுவதற்கு உறுதி மேற்கொள்ள வேண்டும் என பாரதியார் விதித்த புதிய சிந்தனை இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் பொருந்தும் உலக நியதி .
எனவே அத்தகை பெரிய மகாகவி பாரதியாரின் படைப்புகள், கவிதைகள், தத்துவங்கள் மற்றும் அவரது வாழ்வைப் பார்த்து நாமும் அது போன்ற வழியில் பின்பற்ற வேண்டும் .
மேலும் பாரதியின் நினைவு நாளை போற்றும் விதமாக தமிழக அரசு ‘மகாகவி நாள்’ என அறிவித்துள்ள்ளது எனது குறிப்பிடத்தக்கது .
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
