Connect with us

“கேப்டன் மில்லர் படத்துல டயலாக் ரொம்ப குறைவு! யார் சொல்லியிருக்காங்க தெரியுமா?!”

Cinema News

“கேப்டன் மில்லர் படத்துல டயலாக் ரொம்ப குறைவு! யார் சொல்லியிருக்காங்க தெரியுமா?!”

தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது கேப்டன் மில்லர் படம். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. மதுரையில் சமீபத்தில் தனுஷ் ஜாக்கிங் செய்த வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் பீரியட் படமாக உருவாகி வருகிறது. நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க சிறப்பான வகையில் உருவாகி வருகிறது கேப்டன் மில்லர்.

இந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். ராக்கி, சாணிக் காயிதம் படங்களை தொடர்ந்து தற்போது வரலாற்று பின்னணியில் இந்தப் படத்தை இயக்கி வருகிறார் அருண் மாதேஸ்வரன். இந்தப் படத்திற்காக நீண்ட தாடி, மீசை, தலைமுடி என அசத்தலான கெட்டப்பில் தனுஷ் காணப்படுகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது மதுரையில் கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மதுரையின் சாதாரண சாலையில் தனுஷ் ஜாக்கிங் சென்ற வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் மாதத்திலும் டீசர் ஜூலை மாதத்திலும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துவரும் நிலையில், படத்தின் வசனத்தை கவிஞர் மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

இந்நிலையில், படத்தில் டயலாக்குகள் மிகவும் குறைவு என்றும் மிகவும் எளிமையாக இருக்கும் என்றும் மதன் கார்க்கி தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் ஆக்ஷன் காட்சிகளில்தான் அருண் மாதேஸ்வரன் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும் அவருடைய முந்தைய படங்கள் போலவே இந்தப் படத்தின் மேக்கிங்கும் தனித்தன்மையுடன் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். படத்தின் கதை மிகவும் அழகானது என்றும் அதை அருண் மாதேஸ்வரன் மிகவும் சிறப்பாக உருவாக்கி வருவதாகவும் மதன் கார்க்கி மேலும் கூறியுள்ளார். மதன் கார்க்கி பெரிய இயக்குநர்களுடன் இணைந்து பல படங்களில் வசனங்கள் எழுதி வரவேற்பை பெற்றவர்.

இந்நிலையில், அருண் மாதேஸ்வரனுடன் மதன் கார்க்கி இணைந்துள்ளது கேப்டன் மில்லர் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. பீரியட் படமாக உருவாகி வரும் கேப்டன் மில்லர், 1930ம் ஆண்டுகளின் காலகட்டத்தை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இலங்கைப் போரில் போராளியாக இருந்த வல்லிபுரம் வசந்தன் என்பவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்தப் படத்திற்கான தனுஷின் கெட்டப்பும் மேலும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

See also  நடிகர் சிம்புவுக்கு இவருடன் தான் திருமணமா..??வெளியான சூப்பர் தகவல்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top