Connect with us

மாமன்னன் படத்தின் 2nd Single அப்டேட்..! A R Rahman போட்ட சூப்பர் ட்வீட்!

Cinema News

மாமன்னன் படத்தின் 2nd Single அப்டேட்..! A R Rahman போட்ட சூப்பர் ட்வீட்!

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் வெளியானது. நடிகர் வடிவேலு பாடியுள்ள இந்த பாடல், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த பாடல் ஹிட் அடித்ததை தொடர்ந்து அடுத்த பாடலை வரும் 27ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்..அதனை A R Rahman உறுதி செய்துள்ளார்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "அடுத்த ஆண்டு Oscar விருதுக்கு தேர்வான மலையாள சினிமாவின் '2018' படம்! மகிழ்ச்சியில் கேரள திரையுலகம்!"

More in Cinema News

To Top