Connect with us

லவ் டுடே படத்தின் தயாரிப்பாளரிடமே யூடுயூபர் கேட்ட அந்த கேள்வி – தூக்கிவாரி போட்ட Moment வீடியோ இதோ…

Cinema News

லவ் டுடே படத்தின் தயாரிப்பாளரிடமே யூடுயூபர் கேட்ட அந்த கேள்வி – தூக்கிவாரி போட்ட Moment வீடியோ இதோ…

கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே நடித்து வெளியாகி உள்ள லவ் டுடே படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்துள்ளனர். கடந்த வாரம் நித்தம் ஒரு வானம், லவ் டுடே மற்றும் காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்கள் வெளியாகின. ஆனால், மற்ற படங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு அதிக காட்சிகளுடன் லவ் டுடே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து வருகிறது. இந்நிலையில், இயக்குநரும் ஹீரோவுமான ரங்கநாதன் பிரதீப் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள நன்றி கடிதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பாளரிடம் யூடியூப்பர் கேட்ட கேள்வி வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது, லவ் டுடே படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் யூடியூப்பர் ஒருவர், பிரதீப் ரங்கநாதன் ஹீரோவா நடித்திருக்கிறார். அதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு சிரித்துக் கொண்டே அர்ச்சனா, நாதன்யா புரொடியூஸ் பண்ணேன் எனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தில் சத்யராஜின் மகளாக இவானா நடித்திருக்கிறார். இவானா- பிரதீப் ரங்கநாதன் இருவரும் காதலிக்கிறார்கள். இதை இரு வீட்டிலும் சொல்ல நினைக்கிறார்கள். அப்போது இவானாவின் அப்பா சத்யராஜ் இருவருக்கும் ஒரு நிபந்தனையை வைக்கிறார். அதாவது, நீங்கள் இருவரும் உண்மை காதலர்கள் என்றால் ஒரே ஒரு நாள் மட்டும் உங்களுடைய செல்போன்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்வது தான் படத்தின் முழு கதை .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நாளை முதல் Entertainment-க்கு பஞ்சம் இருக்காது..Big Boss 7 ஸ்பெஷல் Promo வீடியோ இதோ..

More in Cinema News

To Top