Connect with us

70 கோடியை தாண்டிடுச்சு.. லவ் டுடே புதிய வசூல் சாதனை!!

Cinema News

70 கோடியை தாண்டிடுச்சு.. லவ் டுடே புதிய வசூல் சாதனை!!

பிரதீப் ரங்கநாதன் தானே இயக்கி நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து உலகம் முழுவதும் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

90ஸ் கிட்ஸ்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அறிமுக இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியிருந்தார்.

இந்த படம் கொடுத்த மிகப்பெரும் வெற்றியை தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கி, தானே நடித்துள்ள படம் தான் லவ் டுடே. கோமாளியின் 90ஸ் கிட்ஸ் என்றால் இதில் 2கே கிட்ஸ் வாழ்க்கையை மையப்படுத்தி தரமான ஒரு படத்தை கொடுத்துள்ளார்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா எனும் அறிமுக நாயகி நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. படம் வெளியாகும்போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியானாலும், ரசிகர்களின் பேராதரவால் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

படத்தின் வசூலை பொறுத்தவரை, முதல் நாள் ரூ.3 கோடி மட்டுமே வசூலான நிலையில், இரண்டாம் நாள் ரூ.5.35 கோடி, மூன்றாம் நாள் ரூ.6.25 கோடி என தொடர்ந்து அதிகரித்து 11 ஆம் நாள் முடிவில் உலகளவில் வசூல் ரூ.50 கோடியை கடந்தது.

இந்நிலையில், தற்போது படம் வெளியாகி இன்றுடன் 20 நாட்கள் கடந்துவிட்ட சூழலில், உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.6 கோடி தான் எனக் கூறப்படும் நிலையில், வசூல் பல மடங்கு கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top