Connect with us

லியோ படத்தின் ரிசல்ட் பார்த்து முடிவை மாற்றிய லோகேஷ்..!இப்படி ஒரு முடிவா…

Cinema News

லியோ படத்தின் ரிசல்ட் பார்த்து முடிவை மாற்றிய லோகேஷ்..!இப்படி ஒரு முடிவா…

நடிகர் விஜய்- த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் கடந்த 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது…இப்படத்திற்கு எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

இந்தப் படத்தில் பார்த்திபன் – லியோ என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார் சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் கடந்த 4 நாட்களில் இந்தப் படத்தின் வசூல் 400 கோடியாக உள்ளது…அதனால் அனைவரும் இப்படத்தை கொண்டாடுகின்றனர்…இந்த வசூல் இனிவரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் சூட்டிங்கை கடந்த பிப்ரவரி மாதத்தில் லோகேஷ் கனகராஜ் துவங்கினார்…முன்னதாக டைட்டிலை சிறப்பான டீசருடன் அறிவித்திருந்தார் மேலும் ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டு படத்தின் சூட்டிங்கை துவங்கினார் தொடர்ந்து காஷ்மீரில் 52 நாட்கள் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது என்பது அனைவருமே அறிந்து இருப்போம்…

இதையடுத்து சென்னை மற்றும் சில பகுதிகளிலும் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது..படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு சூட்டிங்கை நடத்தியதால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருந்ததாகவும் கடிவாளம் கட்டியதை போன்று உணர்ந்ததாகவும் லோகேஷ் முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார்…

தலைவர் 171 படத்தை முடிக்க தனக்கு ஒரு வருட காலம் தேவைப்படுவதாகவும் அடுத்ததாக துவங்கவுள்ள கார்த்தியின் கைதி 2 படத்தை முடிக்கவும் ஒரு வருட காலம் தேவைப்படுவதாகவும் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இதனால் இனி அவர் மிகவும் பொறுமையாக படம் செய்வார் என்று கருதப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கனமழையிலும் தடையற்ற மின்சாரம் - கர்வத்தில் கர்ஜித்த அமைச்சர் தங்கம் தென்னரசு

More in Cinema News

To Top