தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா..?ரத்தாகுமா..?முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன..?

0
20

கொரோனாவின் இரண்டாவது அலை தற்பொழுது அதிகரித்து வருகிறது.மேலும் தமிழ்நாடு,கேரளா உள்ளிட்ட 16 மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 46,781 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. எனினும், 58,805 பேர் குணமடைந்தது ஆறுதல் ஏற்படுத்தி உள்ளது. ஒரே நாளில் 816 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரெம்டெசிவிர் மருந்தின் தேவை கருதி சென்னை மட்டுமின்றி மற்ற நகரங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா தடுப்பில் தமிழக அரசின் பணியில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இரவு பகல் பாராமல் கொரோனா தடுப்பு பணிகளுக்கு கட்டளை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாட்டை கவனத்தில் கொள்ளாமல் சிலர் வெளியே சுற்றி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்ய சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்க அரசாணை வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.