கொரோனா பிடியில் சிக்கிய தமிழகம்…லாக்டவுன் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டது என்ன..?

0
65

கொரோனா பாதிப்பு தொடர்ந்து தமிழகத்தில் அதிகரித்து வருவதால், ஊரடங்கை வருகிற 30-ந் தேதி வரையிலும் நீட்டித்ததோடு, பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும் அரசு பிறப்பித்தது. அதன்படி, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்து வருவதற்கு இ-பாஸ் கட்டாயம். பஸ் பயணங்களில் நின்றுகொண்டு செல்ல அனுமதி இல்லை. மத வழிபாட்டு தளங்கள் இரவு 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். திரையரங்குகள், ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் கூட சென்னை தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்கள்.மேலும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுமோ என்ற அச்சமும் பொது மக்கள் மத்தியில் தற்பொழுது கேள்வி எழுப்பி வருகிறது .மேலும் மகாராஷ்டிரா கொரோனா பரவலுக்கு அடுத்து தமிழகத்தில் தான் அதிகம் பாதிப்பு உண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அப்பொழுது நடைபெற்ற கூட்டத்தில் பல முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் குறிப்பாக 5 அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது, தடுப்பூசி திட்டத்தைத் தீவிரப்படுத்துவது, பிளஸ்-2 தேர்வைத் தள்ளி வைப்பது, மேலும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகிய 5 திட்டங்கள் குறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.