Connect with us

தமிழ்நாட்டில் மேலும் 1 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு …கூடுதல் தளர்வுகள் என்னென்ன..?

Featured

தமிழ்நாட்டில் மேலும் 1 வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு …கூடுதல் தளர்வுகள் என்னென்ன..?

தமிழ்நாட்டில் தற்பொழுது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தற்பொழுது அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் ஜூலை 19 வரை மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது . மேலும் இந்த முறையும் சில கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்பட்டு உள்ளது .

அந்த கூடுதல் தளர்வுகளில் தெரிவித்திருப்பதாவது புதுச்சேரிக்கு பேருந்து சேவை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வு வழிகாட்டு நெறிமுறையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள், நடைபாதை கடைகள் ஆகியவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த கூடுதல் தளர்வானது கொடுக்கப்பட்ட முந்தைய தளர்வுகளுடன் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் திரையரங்குகள்,நீச்சல் குளங்கள் பள்ளிகள் ,கல்லூரிகள் திறக்க தடை நீடிக்கப்பட்டு உள்ளது .

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Featured

To Top