Connect with us

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மறுப்பு தெரிவித்த பாமாகா…இது தான் காரணமா…?

Featured

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மறுப்பு தெரிவித்த பாமாகா…இது தான் காரணமா…?

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணியிலிருந்து விலகியதால் பாமகவுக்குதான் இழப்பு என அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.மேலும் பாமக தங்களை கட்சியினை திட்டினாள் பதிலுக்கு தாங்களும் திட்டுவோம் என காரா சாரமாக தெரிவித்தார்.

இந்த நிலையில் கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த பாமக செய்தித் தொடர்பாளர் பாலு, தேர்தல் நடைபெற உள்ள 7 மாவட்டங்களில் பாமக பலமாக உள்ளது. எனவே பாமகவில் அதிகமானோருக்கு வாய்ப்பு தருவதற்காக தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளோம் என்றார்.இதுவரை இருந்த கூட்டணியில் தொடர்வதாகவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்த முடிவை ராமதாஸ் அறிவிப்பார் என்ற அவர், “சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து மட்டுமே பாமக-அதிமுக ஒப்பந்தம் போடப்பட்டது” என்றும் விளக்கினார்.

More in Featured

To Top