Connect with us

லிங்கா பட தோல்விக்கு ரஜினி காரணம்…எனக்கு பிடிக்காம அதை பண்ண சொன்னார்…வீடியோ

Cinema News

லிங்கா பட தோல்விக்கு ரஜினி காரணம்…எனக்கு பிடிக்காம அதை பண்ண சொன்னார்…வீடியோ

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த், சோனாக்‌ஷி சின்கா, அனுஷ்கா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் லிங்கா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பரில் வெளியானது. ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999ல் படையப்பா வெளியான பிற்கு 15 ஆண்டுகள் பின் இப்படத்தின் மூலம் கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிகாந்த் ஆகியோர் இணைந்தனர் என்ற காரணத்தால் படம் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது .ஆனால் படம் தோல்வியை தழுவியது .

Rajinikanth Is The Reason For Linga Movie Flop Says Director KS Ravikumar  In An Interview | “ரஜினி தலையிட்டதால் க்ளைமேக்ஸ மாத்த வேண்டியதா போச்சு”  போட்டு உடைத்த கே.எஸ்.ரவிக்குமார்..

அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற மிக நீண்ட அந்த க்ளைமேக்ஸ் காட்சியில், பைக்கில் வேகமாக வரும் ரஜினிகாந்த், மலையில் இருந்து பைக்குடன் குதித்து பாராசூட் மீது விழுந்து, அதில் இருக்கும் வெடிகுண்டை அப்புறப்படுத்தி அணையைக் காப்பாற்றுவார். இந்த காட்சிகள் ரஜினி ரசிகர்களின் பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் சோதித்தது. இதனையடுத்து இயக்குநர் கே,எஸ்,ரவிக்குமாரை அனைவரும் வறுத்தெடுத்தனர்.

Lingaa Climax Baloon Scene Reaction (தமிழ்) | Rajinikanth, Anushka | K.S  Ravikumar - YouTube

இந்நிலையில் இது குறித்து இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் கொடுத்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது ,லிங்கா கதாபாத்திரத்தை அதிகமாக காண்பியுங்கள் என்று சொன்னார். இதையெல்லாம் என்னுடைய அசிஸ்டன்ட் இயக்குனருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. வேறு வழியில்லாமல் நாங்கள் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்தோம். அதுமட்டுமில்லாமல் அந்த பலூன் காட்சியே முதலில் இல்லை. பின் என்னென்னவோ பண்ணி அந்த கிளைமாக்ஸ் காட்சி வந்தது. ஆனால், எங்களுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. அதே போல் கிளைமாக்ஸ் காட்சியும் மக்கள் மத்தியில் பெரிய அளவு பேசப்படவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top