Connect with us

“வெளியானது LEO படத்தின் Second Single BADASS பாடல்!”

Cinema News

“வெளியானது LEO படத்தின் Second Single BADASS பாடல்!”

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘LEO’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது அனைவருமே அடுத்து என்ன என்பதற்காக காத்துள்ளனர். இந்த வகையில் ‘LEO’ படத்தின் இசை வெளியீட்டு விழா, செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் வேகமாக நடந்து வந்தது.

மேலும் இசை வெளியீட்டு விழாவிற்கான டிக்கெட்டுகளும் பரபரப்பாக விற்பனை செய்யப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென நேற்று இரவு ‘LEO’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் பரபரப்பான தகவலை சொல்லியது.

தயாரிப்பு நிறுவனத்தின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் ‘LEO’ ஆடியோ லான்ச் டிக்கெட்டுகள் போலியாக அச்சிடப்பட்டு விற்பனை செய்ய திட்டமிட்டதாகவும் அதேபோல் அரசியல் அழுத்தமும் ஒரு காரணம் என கூறப்பட்டது.

இப்படி பல தகவல்கள் சர்ச்சையாக வந்தது. இதனால் சோகம் அடைந்த ரசிகர்களை மகிழ்ச்சியாகும் விதமாக நேற்று மாலை 6:15 மணியளவில் LEO Second Single குறித்த அப்டேட் வெளியானது. இன்று மாலை LEO படத்தின் Second Single ‘Badass’ Lyric விடியோவாக வெளியானது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விரைவில் 'அயலான்' இசை வெளியீட்டு விழா! அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

More in Cinema News

To Top