Connect with us

“ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் 15 கோடி! Hollywood தரத்தில் LEO படம்!”

Cinema News

“ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் 15 கோடி! Hollywood தரத்தில் LEO படம்!”

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் குறித்த ஆச்சரியமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஹாலிவுட் படத்திற்கு இணையாக ஒரு காட்சி இந்த படத்தில் உருவாக்கப்பட்ட இருப்பதாகவும் காஷ்மீரில் படமாக்கப்பட்ட இந்த ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் 15 கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், லலித் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’லியோ’.

இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பதும் இந்த படத்தில் விஜய்யுடன், த்ரிஷா, சஞ்சய்தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளதால் இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விஜய், அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் ஆகிய மூவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சி இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு மாஸ் ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற Hyena Sequence காட்சி காஷ்மீரில் படமாக்கப்பட்டதாகவும் இந்த காட்சியை படமாக்கப்பட்டதற்கும் கிராபிக்ஸ் பணிகளுக்கு மட்டும் மொத்தம் 15 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி காஷ்மீரில் படமாக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்றும் தயாரிப்பாளர் லலித் கூறியுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் ஒவ்வொரு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "நடிகர் சிவகார்த்திகேயனை இயக்கவிருக்கும் AR முருகதாஸ்! வெளியானது SK 23 படத்தின் அறிவிப்பு!"

More in Cinema News

To Top