Connect with us

“இன்று வெளியாகவிருந்த LEO Poster Update ரத்து! மரியாதைக்குரிய செயலை செய்த படக்குழு!”

Cinema News

“இன்று வெளியாகவிருந்த LEO Poster Update ரத்து! மரியாதைக்குரிய செயலை செய்த படக்குழு!”

கடந்த இரண்டு நாட்களாக ‘லியோ’ படத்தின் அப்டேட் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றும் மாலை 6 மணிக்கு ‘லியோ’ படத்தின் முக்கிய போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் அந்த அப்டேட்டை எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் சற்றுமுன் இன்றைய ‘லியோ’ அப்டேட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்ட நிலையில் திரையுலகமே சோகத்தில் உள்ளது. பல திரையுலக பிரபலங்கள் விஜய் ஆண்டனி மகள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு சமூக வலைதளங்கள் மூலம் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

விஜய் ஆண்டனி மகள் மறைவால் திரை உலகமே சோகத்தில் இருப்பதால் இன்று ‘லியோ’ படத்தின் அப்டேட் ரத்து செய்யப்படுகிறது என்றும் நாளை அப்டேட் வெளியாகும் என்றும் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "பிரபல தெலுங்கு இயக்குனருடன் இணையவிருக்கும் நடிகர் சூர்யா?! அப்போ படம் தரமா இருக்கும் போல..!"

More in Cinema News

To Top