Connect with us

த்ரிஷா போட்ட செமயான Story “leo” ஷூட்டிங் Spot Video..

Cinema News

த்ரிஷா போட்ட செமயான Story “leo” ஷூட்டிங் Spot Video..

நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. சாமி, கில்லி, கிரீடம், அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவாயா, மங்காத்தா, 96, பேட்ட உள்ளிட்ட பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் த்ரிஷா நடித்துள்ளார்.

அதே போல, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் வெளியாகி இருந்தது.

கல்கி எழுதிய புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்னும் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இதனையடுத்து த்ரிஷா நடிப்பில் ராங்கி திரைப்படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தளபதி 67-ல் த்ரிஷா நடிப்பதாக சில தினங்களுக்கு முன்னர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. விஜய்யுடன் 14 ஆண்டுகள் கழித்து த்ரிஷா நடிக்க இருப்பதால் ரசிகர்கள் இப்போதே உற்சாகமடைந்திருக்கின்றனர்.

இதனிடையே தளபதி 67 படத்தின் காஷ்மீர் ஷூட்டிங் துவங்கியிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.

மேலும், இந்த படத்தின் குழுவினர் அனைவரும் ஒரே விமானத்தில் காஷ்மீர் கிளம்பிச் செல்லும் வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

இதில் த்ரிஷா மற்றும் விஜய் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படங்களும் வைரலாகி வந்தது. இந்த சூழ்நிலையில், த்ரிஷா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஸ்டோரி போட்டுள்ளார்.

ஜன்னல் வழியே வெளியே காட்சிப்படுத்தப்படும் அந்த வீடியோவில் மரங்களும், அடர் பனியும் நிறைந்து காணப்படுகிறது. மேலும் அந்த வீடியோவில் மரங்களில் சிறிய குரங்குகள் குளிரில் நடுங்கியபடி இருப்பதும் தெரிகிறது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.அதனை பார்க்க மிகவும் அழகாக இருப்பதாக சொல்லி வருகின்றனர் அதனை போல இன்ஸ்டா ஸ்டோரி மூலமாக இவரிடம் பலர் அப்டேட் கேட்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top