Connect with us

“அது நெல்சனுக்கு விஜய் கொடுத்த அதிர்ச்சி Party! LEO Cameraman மனோஜ் பரமஹம்சா சொல்லிய ஷாக்கிங் தகவல்!”

Cinema News

“அது நெல்சனுக்கு விஜய் கொடுத்த அதிர்ச்சி Party! LEO Cameraman மனோஜ் பரமஹம்சா சொல்லிய ஷாக்கிங் தகவல்!”

அண்மையில் பேட்டியளித்த லியோ பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, “ பீஸ்ட் திரைப்படத்தின் போது, விஜய் சார் எனக்கு நெல்சனை அறிமுகப்படுத்தினார். அப்போதுதான் நெல்சன் எனக்குத் தெரியும். எனக்கும், நெல்சனுக்கு பீஸ்ட் திரைப்படத்தில் பயங்கரமாக ஜெல் ஆகிவிட்டது. அந்தப்படத்திற்கு பிறகு ஜெயிலர் திரைப்படத்திற்காக புரமோ ஒன்றை ஷூட் செய்து தருமாறு நெல்சன் சொன்னார். நான் ஒரு நாள் இரவில், அனைத்தையும் செட் செய்து எடுத்துக்கொடுத்தேன். ஆனால் நான் ஜெயிலர் திரைப்படம் செய்வதற்கான ஒப்பந்தங்கள் ஏதும் கையெழுத்தாக வில்லை.

இதற்கிடையே விஜய் சார் அலுவலகத்தில் இருந்து போன் செய்து நீங்கள்தான் தான் லோகேஷ் படம் செய்கிறீர்கள் என்று உறுதி செய்துவிட்டார்கள். இதைக்கேட்ட எனக்கும் நெல்சனுக்கும் ஒரே ஷாக். அன்று இரவே விஜய் சார் பார்டிக்கும் கூப்பிட்டார். அந்த பார்ட்டியில் நடந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று, அந்த பார்ட்டி பீஸ்ட் திரைப்படத்திற்காக நடந்தது இல்லை. நெல்சனுடன் தான் மீண்டும் இணையப்போவதாக விஜய் சார் சொல்வதற்கான பார்ட்டியே அது.

இன்னொரு விஷயம், விஜய் சார் நெல்சனிடன், அவன் உன்னுடைய படம் செய்ய வில்லை. என்னுடைய படம் தான் செய்கிறான், அவன் எனக்கு வேண்டும் என்று என்னை கமிட் செய்து விட்டார். காரணம், நெல்சன் என்னை கூப்பிடுவார் என்று விஜய் சாருக்குத் தெரியும். உடனே அங்கேயே எனக்கு பதிலாக விஜய் கார்த்திக் கண்ணனை கேமராமேனாக போடலாம் என்று சொல்லி, அந்த விஷயத்தை அன்றே முடிவு செய்து விட்டோம்.

லோகேஷையும் விஜய் சார்தான் எனக்கு அறிமுகப்படுத்திவைத்தார். லோகேஷூக்கும் என்னை மிகவும் பிடித்து விட்டது. இதனையடுத்து லோகேஷின் பிறந்தநாளுக்கு நான் அடுத்தாக ரஜினியுடன் இணையும் படத்திற்கு நீங்கள்தான் கேமராமேன் என்று என்னை கமிட் செய்து விட்டார். அப்போது நடிகர் விஜய் சார் அழைத்து லோகேஷின் அடுத்தப்படத்திற்கு நீதான் கேமராமேன். தெலுங்கு படம் எதையும் கமிட் செய்யாதே என்று சொன்னார். ரஜினி சார் படத்தை நீதான் செய்ய வேண்டும் என்று சொன்னார்.” என்று பேசினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "எப்படி இருக்கு ரன்பிர் கபூரின் 'Animal' படம்! படத்தின் விமர்சனம் இதோ.!"

More in Cinema News

To Top