Cinema News
கதீஜாவாக இந்த ஹீரோயின் தான் பர்ஸ்ட் நடிக்க இருந்தாங்களா ..?
விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின்,முதலில் கதீஜா கேரக்டருக்கு த்ரிஷாவை நடிக்க வைக்கவே இயக்குனர் விக்னேஷ் சிவன் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அவரது தேதிகள் கிடைக்காததால் படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்ததால் அவர் சமந்தாவிடம் இது பற்றி பேசியதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.சமந்தாவும் தெலுங்கில் பிசியாக இருந்த நிலையில் நயன்தாரா தான் அவருடன் பேசி இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள வைத்ததாகவும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை கதீஜா கேரக்டரில் சமந்தாவுக்கு பதில் த்ரிஷா நடித்து இருந்தால் அந்த படம் எப்படி இருந்து இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.சமந்தாவுக்கு தெலுங்கில் மிகப்பெரிய மார்கெட் இருப்பதாலும், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவருமே தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதாலும் இந்த படம் தெலுங்கு மாநிலங்களிலும் நல்ல வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
