Connect with us

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கே.எல்.ராகுலை பல கோடிகள் கொடுத்து ஏலத்தில் எடுக்க துடிக்கும் புதிய அணி..! நம்ப ஆளுக்கு செம டிமாண்ட் இருக்கு போலயே..

Featured

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கே.எல்.ராகுலை பல கோடிகள் கொடுத்து ஏலத்தில் எடுக்க துடிக்கும் புதிய அணி..! நம்ப ஆளுக்கு செம டிமாண்ட் இருக்கு போலயே..

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்த வருடம் முதல் அகமதாபாத், லக்னோ நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டு புதிய அணிகள் இணைக்கப்பட்டுள்ளன .

இதில் லக்னோ அணியை, ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. அகமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேப்பிடல் ரூ. 5,600 கோடிக்குச் கைப்பற்றியுள்ளது .

இதையடுத்து 2022 ஐபிஎல் டி20 தொடரில் 10 அணிகள் களம் காண்கின்றன. ஒவ்வொரு அணியும் 3 உள்நாட்டு வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரரை மட்டும் தக்கவைத்து மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் (நவ.30) அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும் என்பதால், ஐபிஎல் அணிகள் பட்டியலைத் தீவிரமாகத் தயாரித்து வருகின்றன.

KL Rahul likely to lead Lucknow team in IPL 2022: Reports | CricketTimes.com

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கே.எல்.ராகுல், இந்தாண்டு அந்த அணியில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை தக்கவைக்க வேண்டுமென்றால் ரூ.16 கோடிக்கு தான் பஞ்சாப் அணி ஏலம் எடுக்க முடியும்.

இந்நிலையில் அதிரடி ஆட்டக்காரர் கே.எல்.ராகுலை ரூ. 20 கோடிக்கு ஏலம் எடுக்க லக்னோ அணி அவரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. 2018 ஐபிஎல் ஏலத்தில் கே.எல்.ராகுலை ரூ.11 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் அருமையான ஃபார்மில் இருக்கும் ராகுல், கடந்த 4 சீசன்களில் முறையே 659, 593, 670, 626 ரன்கள் எடுத்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top