Connect with us

கோலியின் சாதனையை வந்த ஒரே போட்டியில் முடித்த ராகுல்..!தரமான சம்பவம்..

Sports

கோலியின் சாதனையை வந்த ஒரே போட்டியில் முடித்த ராகுல்..!தரமான சம்பவம்..

இன்று அனைவரின் எதிர்பார்ப்புடன் சூப்பர் 4 சுற்றின் 3வது போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்று வந்தது ஆனால் மழை காரணமாக அப்படியே நின்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

அதேபோல் கேஎல் ராகுல் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராகவும் இடம்பிடித்துள்ளார்.இவர் அணிக்கு திரும்பியதால் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளார்.அவருக்கு இஞ்சூரி எனவும் பேசப்படுகிறது…இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 49 பந்துகளில் 4 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உட்பட 56 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில் 52 பந்துகளில் 10 பவுண்டரிகள் உட்பட 58 ரன்கள் சேர்த்தார்.

இரு தொடக்க வீரர்களும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்தது.இதன்பின் 4வது பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் களமிறங்கினார். தொடக்கத்தில் பொறுமையாக விளையாடிய அவர் பின்னர் ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சில் இரு பவுண்டரிகளை விளாசினார்…இதன்பின்னர் 24.1 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கேஎல் ராகுல் 17 ரன்களுடன் ஆட்டத்தில் உள்ளார் இந்தப் போட்டியில் கேஎல் ராகுல் 14 ரன்கள் எடுத்தபோது ஒருநாள் கிரிக்கெட்டில் 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை இவர் இப்போது பெற்றார்….இதுவரை 53 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள கேஎல் ராகுல் 2003 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார்.

அதனை போல ஒருநாள் கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவருமே 53 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, இப்படி உள்ளே வந்த மேட்சிலும் இப்படி ரெகார்ட் செய்ததால் அவரை அனைவருமே பாராட்டி வருகின்றனர்..நல்ல Comeback ஆக மாறும் என சொல்லப்படுகிறது..அப்படி மழை இன்னும் இருந்தால் நாளை போட்டி மாற்ற படும் என தெரிகிறது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆஸ்திரேலியா அணியை மிரள வைத்த இந்திய அனியின் பேட்டிங்…வெறித்தனமான சம்பவம்!

More in Sports

To Top