Connect with us

கே எல் ராகுல் தனது கல்யாணத்தை செம கிராண்டாக செய்யவுள்ளார்!!

Featured

கே எல் ராகுல் தனது கல்யாணத்தை செம கிராண்டாக செய்யவுள்ளார்!!

காதலை கல்யாணம் வரை கூடி செல்வது தான் அழகு அப்படி கடந்த 5 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி இருவரும் காதலித்து வருகின்றனர்.

இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு இவர்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான வீட்டில் வைத்து இவர்களது திருமணம் நடக்க இருக்கிறது.

இந்த திருமண நிகழ்ச்சியில் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி நெருங்கிய உறவினர்களும் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது.ரசிகர்கள் பலர் கலந்துகொள்ளவும் வாய்ப்புள்ளதாம்..

திருமணத்திற்கு முன்னதாக நேற்று நடந்த மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று நடக்கும் திருமணத்தைத் தொடர்ந்து கணவன் மனைவியாக கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் இன்று மாலை 6.30 மணியளவில் ஊடகங்களுக்கு போட்டோசை தர இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் காரணமாக நியூசிலாந்து தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் கேஎல் ராகுல் இடம் பெற்றுள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.அதனால் கல்யாணம் முடிந்த சில நாட்களிலே தனது கிரிக்கெட் பயணத்தை மேற்கொள்ள உள்ளார் ராகுல்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top