Connect with us

டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு..! கொல்கத்தாவின் சுழலில் சிக்குமா டெல்லி..!

IPL 2021

டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு..! கொல்கத்தாவின் சுழலில் சிக்குமா டெல்லி..!

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். தொடரில், லீக் போட்டிகள் முடிந்து தற்போது ‘பிளே-ஆப்’ சுற்று நடந்து வருகிறது. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதையடுத்து நடந்த வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வெளியேற்றியது .

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் டெல்லி மற்றும் , கொல்கத்தா அணிகள் இன்றிரவு சார்ஜாவில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வுசெய்துள்ளது . இதையடுத்து கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் களத்தில் உள்ளனர்.

லீக் சுற்றில் 20 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடம் பிடித்த டெல்லி அணி சென்னைக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் 172 ரன்கள் சேர்த்த போதிலும், கடைசி ஓவரில் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது.

இந்நிலையில் அனல் பறக்கும் இந்த போட்டியில் எந்த அணி வென்று இறுதி போட்டிக்குள் செல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்தித்து வெளியேற போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

https://www.cinemamedai.com/sports/ipl/ipl-2021/

Continue Reading
Advertisement
You may also like...

More in IPL 2021

To Top