Connect with us

(KKR VS DC ) : அனல் பறக்கும் இன்றைய போட்டியில் இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்..?

Featured

(KKR VS DC ) : அனல் பறக்கும் இன்றைய போட்டியில் இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்..?

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். தொடரில், லீக் போட்டிகள் முடிந்து தற்போது ‘பிளே-ஆப்’ சுற்று நடந்து வருகிறது. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதையடுத்து நடந்த வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வெளியேற்றியது .

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதை தீர்மானிக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் டெல்லி மற்றும் , கொல்கத்தா அணிகள் இன்றிரவு சார்ஜாவில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

லீக் சுற்றில் 20 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடம் பிடித்த டெல்லி அணி சென்னைக்கு எதிரான முதலாவது தகுதி சுற்றில் 172 ரன்கள் சேர்த்த போதிலும், கடைசி ஓவரில் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது.

இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத டெல்லி அணி கடந்த ஆண்டை போல் மறுபடியும் இறுதிப்போட்டிக்குள் கால்பதிக்கும் முனைப்புடன் வியூகங்களை தீட்டி வருகிறது.

மறுபுறம் கொல்கத்தாவின் பிரதான பலமே சுழற்பந்து வீச்சு தான். வெளியேற்றுதல் சுற்றில் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் 4 விக்கெட்டுகளை சாய்த்து, பெங்களூரு பேட்ஸ்மேன்களை மிரள வைத்தார்.

ரன்வேகத்தை கட்டுப்படுத்துவதில் கில்லாடிகளான நரினும் (14 விக்கெட்), வருண் சக்ரவர்த்தியும் (16 விக்கெட்) கொல்கத்தாவின் சுழல் சக்ரவர்த்தியாக திகழ்கிறார்கள். இன்றைய ஆட்டத்திலும் அவர்களது பந்து வீச்சு அச்சுறுத்தலாக அமையலாம். ஏற்கனவே 2 முறை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியிருக்கும் கொல்கத்தா அணி 3-வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை உருவாக்க கடுமையாக முயற்சிக்கும் என்பதில் எந்த சந்தேகமில்லை.

இந்நிலையில் அனல் பறக்கும் இந்த போட்டியில் எந்த அணி வென்று இறுதி போட்டிக்குள் செல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்தித்து வெளியேற போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்

https://www.cinemamedai.com/sports/ipl/ipl-2021/

Continue Reading
Advertisement
You may also like...

More in Featured

To Top