Connect with us

டெல்லியை 135 ரன்களுக்குள் சுருட்டிய கொல்கத்தா..! பந்துவீச்சில் ஜொலிக்குமா டெல்லி..?

IPL 2021

டெல்லியை 135 ரன்களுக்குள் சுருட்டிய கொல்கத்தா..! பந்துவீச்சில் ஜொலிக்குமா டெல்லி..?

ஷார்ஜாவில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது பிளே-ஆஃப் சுற்றில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் விளையாடி வருகின்றன. அனல் பறக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதையடுத்து டெல்லி அணிக்காக தவான் மற்றும் பிருத்வி ஷா களம் இறங்கினர். ஐந்தாவது ஓவரில் வெறும் 18 ரன்கள் எடுத்து பிருத்வி ஷா அவுட்டானார். பவர் பிளே ஓவர்கள் முடிவில் அந்த அணி 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

பின்னர் சுதாரிப்பாக விக்கெட்டை மட்டும் விடாமல் தவான் – ஸ்டாய்னிஸ் இணையர் விளையாடினர். இருவரும் 44 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். ஸ்டாய்னிஸ் 12-வது ஓவரில் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

தொடர்ந்து தவான் மற்றும் பண்ட் அவுட்டாகி வெளியேறினார். 16 ஓவர்கள் முடிவில் 92 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது டெல்லி. ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ஹெட்மயர் களத்தில் இருந்தனர். 19-வது ஓவரில் ஹெட்மயர், 17 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். ஷ்ரேயஸ் ஐயர் 30 ரன்கள் எடுத்து இறுதி வரை விக்கெட்டை இழக்காமல் இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்களை மட்டுமே எடுத்தது டெல்லி. இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது கொல்கத்தா. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் அனல் பறக்கும் இந்த போட்டியில் எந்த அணி வென்று இறுதி போட்டிக்குள் செல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்தித்து வெளியேற போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

https://www.cinemamedai.com/sports/ipl/ipl-2021/

Continue Reading
Advertisement
You may also like...

More in IPL 2021

To Top