Connect with us

ஏக் கவுமே ஏக் இசான் ரகுதாத்தா.. கேஜிஎஃப் பட தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்த கீர்த்தி சுரேஷ்..!!

Cinema News

ஏக் கவுமே ஏக் இசான் ரகுதாத்தா.. கேஜிஎஃப் பட தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்த கீர்த்தி சுரேஷ்..!!

கேஜிஎஃப் 1 & 2, காந்தாரா போன்ற பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய படத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்று நடிகை கீர்த்தி சுரேஷ் மிகச் சிறந்த நடிகையாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஒருபக்கம் மிகச் சிறந்த நடிப்பை வெளிக்காட்ட வேண்டிய சாணிக்காயிதம் போன்ற படங்களில் நடித்தாலும், கமர்ஷியல் படங்களிலும் அசத்தி வருகிறார்.

தற்போது தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா போன்ற படங்களில் நடித்துவரும் நிலையில், ஹோம்பலே பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கீர்த்தி சுரேஷின் புதிய பட போஸ்டரை வெளியிட்டு, “புரட்சி குடும்பத்தில் இருந்துதான் தொடங்குகிறது. தயாராகுங்கள்” என தமிழில் பதிவிட்டுள்ளது.

மேலும் இந்த படத்திற்கு ‘ரகு தாத்தா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹோம்பலே பிலிம்ஸ் படக்குழுவுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ், மிக பிரபலமான வசனமான “ஏக் கவுமே ஏக் இசான் ரகுதாத்தா” என ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.

சுமன் குமார் எழுதி இயக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க உள்ளார். சாணிகாயிதம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த யாமினி யக்னாமூர்த்தி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், படத்தை அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கு வர கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top