Connect with us

தனது மகனின் சாதி என்ன பேட்டியில் தைரியமாக சொல்லிய நடிகை கயல் ஆனந்தி!!

Cinema News

தனது மகனின் சாதி என்ன பேட்டியில் தைரியமாக சொல்லிய நடிகை கயல் ஆனந்தி!!

2014ம் ஆண்டு பொறியாளன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை கயல் ஆனந்தி. அதன்பிறகு அவர் நடித்த கயல் திரைப்படம் அவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது.

அப்படத்தில் இருந்து கயல் ஆனந்தி என அழைக்கப்படும் இவர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற பல படங்களில் நடித்தார்.

தற்போது கயல் ஆனந்தி முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி இருக்கும் இராவண கோட்டம் படத்தில் சாந்தனு ஜோடியாக நடித்துள்ளார்.

மே 12ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள்.

அப்போது ஒரு பேட்டியில் கயல் ஆனந்தி பேசும்போது, எனது மகனுக்கு சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிடவில்லை, சாதியில்லா சான்றிதழ் தான் பெற்றுள்ளேன். அதற்கு காரணம் இதுக்கு முன்னாடி அனைவரும் சாதி பெயரை சுமந்துட்டு இருந்தாங்க.

நான் என் மகனுக்கு அது தொடர விரும்பவில்லை. இந்த முடிவிற்கு காரணம் நான் படித்த புத்தகங்களும் நான் சந்தித்த நபர்களுடனான உரையாடல் மூலமாக எனக்கு தோன்றியது என்றும் தெரிவித்துள்ளார்…இந்த மேட்டர் வருகிறது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அதிரடியாக தயாராகும் லால்சலாம்…தலைவரின் மாஸ் வீடியோ!

More in Cinema News

To Top