Connect with us

‘ஆஸ்கர்’ விருதை கூழாங்கல் திரைப்படம் நிச்சயம் வெல்லும் என்று நம்புகிறேன்..! நம்பிக்கை தெரிவித்த கார்த்திக் சுப்பராஜ்…

Cinema News

‘ஆஸ்கர்’ விருதை கூழாங்கல் திரைப்படம் நிச்சயம் வெல்லும் என்று நம்புகிறேன்..! நம்பிக்கை தெரிவித்த கார்த்திக் சுப்பராஜ்…

சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘ஆஸ்கர்’ விருதுக்கு இந்தியா சார்பில் போட்டியிடும் ‘கூழாங்கல்’ படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விருது கிடைக்க நான் பிரார்த்தனை செய்துகொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் .

அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ படத்தை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியின் ‘ரெளடி பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது.

Vignesh Shivan, Nayanthara to present 'Koozhangal' | The News Minute

இதற்கு முன்னதாக இப்படம், நெதர்லாந்து நாட்டில் ரோட்டர்டாம் 50 வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘டைகர்’ பிரிவுக்கு போட்டியிட்டு விருதையும் வென்ற முதல் தமிழ் படமாக சாதனையும் செய்தது.

உக்ரைனில் நடந்த ‘மோலோடிஸ்ட்’ சர்வதேச திரைப்பட விழா, சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த ‘ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா’விலும் திரையிட கூழாங்கல் படம் தேர்வானது.

இந்நிலையில், தற்போது, சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கர் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க கூழாங்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சினிமா துறையினர் பலரும் ‘கூழாங்கல்’ திரைப்படக்குழுவிற்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கிரேட் நியூஸ். எனக்கு நம்பிக்கை இருக்கிறது ’கூழாங்கல்’ ஆஸ்கர் வெல்லும். பிரார்த்தனை செய்கிறேன்” என்று வாழ்த்தியுள்ளார்.

More in Cinema News

To Top