30 ஆண்டுகள் கழித்து வெளிவருகிறது சொப்பணசுந்தரி ரகசியம்!!!

0
227

தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே எவராலும் மறக்க முடியாத திரைப்படம் கரகாட்டக்காரன் தான். இந்த படமானது வெளியாகி 500 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி புதிய சாதனையை படைத்தது. காமெடி, ஆக்ஷன் , செண்டிமெண்ட் மற்றும் காதல் என அனைத்தையும் சரியான விகிதத்தில் கொண்ட அந்த திரைப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் , கோவை சரளா என பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் காமெடிகள் எல்லாம் தற்போது வரை மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அதிலும் வாழைப்பழ காமெடி மற்றும் சொப்பன சுந்தரி காமெடி ஆகியவை மக்களின் பேவரட்.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதற்கான வேலைகளை இயக்குனர் கங்கை அமரன் ஈடுபட்டு வருகிறார். அதில் ராமராஜன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சொப்பன சுந்தரி யார் என்ற பரம ரகசியத்தை சொல்லப்போகிறோம் என்ற அறிவிப்பை அவர் சமீபத்தில் வெளியிட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.