Connect with us

கமலின் ‘விக்ரம்’ படத்திலிருந்து வெளியான ஸ்டன்னிங் BTS போட்டோ…

Cinema News

கமலின் ‘விக்ரம்’ படத்திலிருந்து வெளியான ஸ்டன்னிங் BTS போட்டோ…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படம் இந்த ஆண்டு திரைக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்து உள்ளதால் , பட குழு தற்போது கடைசி ஷெட்யூலில் படப்பிடிப்பை நடத்த தீவிரம் காட்டி வருகின்றர்.

கமல்ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தின் இறுதிக்கட்டப் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட போட்டோஸ் ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது .அதில் கமலுடன் பழம்பெரும் நடிகர் சந்தானபாரதியும் இடம் பெற்று உள்ளார். ஏற்கனவே , கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றர்.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

இந்நிலையில் தற்பொழுது வெளியான தகவல் படி விக்ரம் படத்தில் இயக்குனரும், பிரபல நடிகருமான சந்தான பாரதி இணைந்துள்ளார். இந்த படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட BTS புகைப்படத்துடன் படக்குழு டிவிட்டரில் அறிவித்தது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட BTS புகைப்படம் வைரலாகி வருகிறது. உடற்பயிற்சி கூடத்தின் பின்னணியில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது. BTS புகைப்படத்தில் கமலுடன் ரசிகர்கள் எடுத்த புகைப்படமும் அடக்கம்.

More in Cinema News

To Top