Connect with us

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய கமல்ஹாசன்..? அப்போ அடுத்த தொகுப்பாளர் யாராக இருக்கும்…

Bigboss Ultimate

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய கமல்ஹாசன்..? அப்போ அடுத்த தொகுப்பாளர் யாராக இருக்கும்…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்தவர் நடிகர் கமல்ஹாசன்.

இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்திருக்கும் நிலையில் சமீபத்தில் ஹாட் ஸ்டார் OTTயில் 24 நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதையும் நம்ப உலகநாயகன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

அனால் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யாரும் சுவாரஸ்யமாக விளையாடவில்லை என பிக் பாஸே வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். நெட்டிசன்களும் அதே கருத்தை தான் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் இந்த வாரத்துடன் BB அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார் என்ற அதிர்ச்சி தகவல் பரவி வரகிறது. இதனால் கமல் மற்றும் BB ரசிகர்களும் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவது உண்மை என்றால் அடுத்த வாரத்தில் இருந்து தொகுப்பாளர் யாராக இருக்கும் என பெரிய விவாதமே நடந்து வருகிறது.

ஒரு பக்கம் பிக் பாஸ் 5ல் சில எபிசோடுகள் மட்டும் வந்த ரம்யா கிருஷ்ணன் அல்டிமேட் நிகழ்ச்சிக்கும் வருவாரோ என்கிற கேள்வி பலருக்கும் எழுந்து இருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigboss Ultimate

To Top