Connect with us

கடைசில பிரியாணி படம் எப்படி இருக்கு..?-திரை விமர்சனம்

Cinema News

கடைசில பிரியாணி படம் எப்படி இருக்கு..?-திரை விமர்சனம்

கடைசில பிரியாணி என்பது ஒரு சில இளைஞர்களின் உன்னதமான முயற்சியாக வெளிவந்த ஒரு திரைப்படம் மற்றும் இந்தத் திட்டமானது தமிழ்ப் படம், இறுதி சுற்று, விக்ரம் வேதா, மண்டேலா, ஜகமே தந்திரம் போன்ற படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஒய் நாட் ஸ்டுடியோஸின் சஷிகாந்தின் ஆதரவைப் பெற்றுள்ளது. இப்படத்தின் டீஸரும் டிரெய்லரும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ரிலீஸுக்கு முன்னாடியே நல்ல எதிர்பார்ப்புடன் இருந்த , கடைசில பிரியாணி இப்போது திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது, இதோ படத்தைப் பற்றிய திரை அலசல் இதோ …

Kadaseela Biriyani (2021) - IMDb

கதைக்களம்:

ஆக்ரோஷமான அம்மாவால் வளர்க்கப்படும் அண்ணன்கள் இருவர் , குடும்பம் பிரிந்து கேரளாவில் அமைதியான அப்பாவால் வளர்க்கப்பட்ட தம்பியைப் பார்த்து அழைத்துப் போக வருகின்றனர். வந்த இடத்தில்தான் அப்பாவைக் கொன்றவன் யார் என்று தெரிகிறது .

கொலைகாரனை கொன்று பழி தீர்க்க அண்ணன்கள் இருவரும் முடிவு செய்ய, விருப்பம் இல்லாத பயந்தாங்குளி தம்பியும் கட்டாயம் காரணமாக உடன் செல்ல , அங்கே கொலைகாரனின் சைக்கோ மகனிடம் சிக்கிக் கொள்கின்றனர். கேரள போலீசை பகடைக் காயாக உருட்டும் அந்த சைக்கோவிடம் சிக்கிய சகோக்களின் நிலை என்ன என்பதே கடைசில பிரியாணி .

வித்தியாசமான திரைக்கதை முயற்சி . கேரளக் காடுகளில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் நிஷாந்த் கலிதிண்டி .

Kadaseela Biriyani Teaser feat. Vijay Sethupathi's narration Tamil Movie,  Music Reviews and News

அறிமுக இயக்குனர் நிஷாந்த் காளிதிண்டி அசத்தல் மற்றும் நகைச்சுவையான திரைப்படத் தயாரிப்பின் மூலம் கவனத்தை ஈர்க்கிறார். நிஷாந்த், சினிமாவை நோக்கிய அணுகுமுறையைப் பொறுத்தவரை, மிகவும் வித்தியாசமான குரலைக் கொண்ட ஒரு மனிதராகத் தோன்றுகிறார், மேலும் அவர் படத்தைத் தொகுத்த விதத்தில் இது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. சீரான இடைவெளியில் ஏதாவது சுவாரஸ்யம் நடப்பதைக் காணக்கூடிய வகையில் திரைக்கதை சுவாரசியமான பாணியில் எழுதப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பாராத சில தருணங்களில், சில விஷயங்கள் நடக்கின்றன, படத்தின் முழு இயக்கவியலையும் மாற்றி, அதன் மூலம் உங்களுக்கு உற்சாகமான பயணத்தை வழங்குகிறது. கடைசி வரை, ஒரு குறிப்பிட்ட அளவிலான சஸ்பென்ஸ் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது, நிஷாந்த் அங்கே ஒரு எழுத்தாளராக வெற்றி பெறுகிறார்.

விஜய் சேதுபதி பின்னணிக் குரல் கொடுத்து கதை சொல்லியாக் வருவதோடு ஒரு காட்சியில் கவுரவத் தோற்றத்தில் நடித்தும் இருக்கிறார் .திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்து இருக்கும்.

More in Cinema News

To Top