Connect with us

ஜெயம் ரவியின் 25-வது படம் அறிவிப்பு–மீண்டும் ஒரு மாஸ் ஹிட் கூட்டணி..

Cinema News

ஜெயம் ரவியின் 25-வது படம் அறிவிப்பு–மீண்டும் ஒரு மாஸ் ஹிட் கூட்டணி..

தற்போது ஜெயம் ரவி நடித்து வரும் ‘கோமாளி’ பட ஜெயம் ரவியின் 24-வது படமாகும். இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் 25-வது படத்தின் இயக்குநர் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன .ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 25-வது படத்தை, லட்சுமண் இயக்கவுள்ளார். இதனை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கவுள்ளார்.அண்ணன் ராஜா இயக்கத்தில் ‘தனி ஒருவன் 2’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், லட்சுமண் இயக்கத்தில் உருவாகும் படத்தை தனது 25-வது படமாக அறிவித்துள்ளார் ஜெயம் ரவி. இதனைத் தொடர்ந்தே ‘தனி ஒருவன் 2’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.லட்சுமண் – ஜெயம் ரவி கூட்டணி ஏற்கெனவே ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. இக்கூட்டணி தற்போது இணையும் 3-வது படமாக இது அமைந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Cinema News

To Top