Connect with us

“ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன் படத்தின் திரைவிமர்சனம் இதோ..!”

Cinema News

“ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன் படத்தின் திரைவிமர்சனம் இதோ..!”

காக்க காக்க சூர்யா போல என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வழக்கம் போல போலீஸ் படங்களில் காட்டும் மாஸ் ஹீரோ அர்ஜுனாக ஜெயம் ரவி வருகிறார். அவரது டீம் நண்பராக அண்ட்ரூ எனும் கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். பிரம்மாவாக வில்லன் ராகுல் போஸ் இளம் பெண்களை தேடி பிடித்து கொடூரமாக கொலை செய்கிறார். கொலை செய்வது மட்டுமின்றி போலீஸுக்கும் சவால் விடுகிறார். இந்த வழக்கு அர்ஜுன் ஜெயம் ரவியிடம் வந்த உடனே வில்லனை சில முயற்சிகளிலேயே பிடித்து விடுகிறார்.

ஆனால், அந்த ஆப்பரேஷனில் தனது உயிர் நண்பனான ஆண்ட்ரூவை இழந்து விட, அந்த வேதனையில் போலீஸ் வேலையே வேண்டாம் என விலகி விடுகிறார். சிறையில் இருந்து எஸ்கேப் ஆகும் பிரம்மா மீண்டும் சேட்டையை ஆரம்பிக்க, பிரம்மாவை போட்டுத் தள்ளும் அர்ஜுன் நிம்மதி பெருமூச்சு விடலாம் என நினைத்தால் மீண்டும் கொலைகள் அதே பாணியில் தொடர்கிறது. யாருடா அடுத்த பிரம்மா? அவரை ஜெயம் ரவி என்ன செய்தார்? என்பது தான் இந்த இறைவன் படத்தின் கதை.

ஜெயம் ரவி வழக்கம் போல தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து கடைசி வரை ரசிகர்களை என்கேஜ் செய்ய முயற்சித்துள்ளார். சைக்கோ பிரம்மாவாக வரும் ராகுல் போஸ் அவரது அனுபவத்திற்கு ஏற்ப மிரட்டுகிறார். விஸ்வரூபம் படத்திலேயே அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தில் சைக்கோவாக கொலவெறியில் நடித்து இருப்பதையும் கொடூரமாக பெண்களை டார்ச்சர் செய்து கொல்வதை பார்த்தாலே கொலையே நடுங்குகிறது.

சார்லி நடிப்பில் அந்த ஒரு ஷாட் பிரம்மிக்க வைக்கிறது படத்திற்கு பெரிய பிளஸ் என்றே சொல்லலாம். படத்திற்கு பிளஸ் ஆக இருக்கவேண்டிய நயன்தாரா போர்ஷன் பெரிய மைனஸ் ஆகி விடுகிறது. ஒட்டுமொத்த படத்திற்கே நயன்தாரா மற்றும் ஜெயம் ரவியின் ரொமான்ஸ் போர்ஷன் செம ஸ்பீடு பிரேக்கராக மாறி விடுகிறது. வழக்கமான சைக்கோ கொலைகாரன் கதையாகவே எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் நகரும் சொதப்பல் திரைக்கதை 2 மணி நேர படத்தையே 20 மணி நேரமாக பார்ப்பது போன்ற ஃபீலிங்கை தருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு! மருத்துவமனை சென்று பார்த்துவரும் திரையுலக பிரபலங்கள்!

More in Cinema News

To Top