Connect with us

“ஜவான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இத்தனை கோடியா?! தரமான சம்பவம் தான் பா?!”

Cinema News

“ஜவான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இத்தனை கோடியா?! தரமான சம்பவம் தான் பா?!”

ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ள ஜவான் படத்துக்கு அனைத்து ஏரியாக்களிலும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதாம். அட்வான்ஸ் புக்கிங் மூலமாக மட்டுமே 50 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது ஜவான். இந்நிலையில், தற்போது ஜவான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஜவான் முதல் நாள் வசூல், 85 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.

இது ஷாருக்கானின் பதான், ரஜினியின் ஜெயிலர் படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பதான் திரைப்படம் முதல் நாளில் 73 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. அதேபோல், ரஜினியின் ஜெயிலர் முதல் நாளில் 60 கோடி வரை கலெக்‌ஷன் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டு படங்களின் சாதனையையும் ஜவான் பிரேக் செய்துள்ளதாம்.

இந்தியில் மட்டும் 65 கோடி வரை வசூலித்துள்ள ஜவான், தமிழ், தெலுங்கு மொழிகளில் தலா 4 கோடி கலெக்‌ஷன் செய்துள்ளது. இந்த கணக்கின் படி இந்தியாவில் மொத்தம் 73 ரூபாய் கோடி வசூல் செய்துள்ளது ஜவான் திரைப்படம். அதேநேரம் உலகம் முழுவதும் சேர்த்து ஜவான் படத்தின் வசூல் 85 கோடி என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற மெட்ரோ சிட்டிகளில் ஜவானுக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளதாம். இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஷாருக்கானின் ஜவான் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த வாரம் முடிவிற்குள், 200 கோடி வசூலை கடந்துவிடும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் விஜய் ஆண்டனி பகிர்ந்த மனதை வருடும் பதிவு…நானும் அவளுடன் இறந்துவிட்டேன்..!

More in Cinema News

To Top