Connect with us

அதகளம் பண்ணும் அவதார் 2.. வேற லெவலில் மிரட்டும் இரண்டாவது டிரெய்லர்..!!

Cinema News

அதகளம் பண்ணும் அவதார் 2.. வேற லெவலில் மிரட்டும் இரண்டாவது டிரெய்லர்..!!

மிகவும் பிரமாண்டமாக தயாராகி வரும் அவதார் 2 படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகி அசர வைத்து வருகிறது.

பிகடந்த 2009 ஆம் ஆண்டில் பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான 3டி படமான அவதார். வேற்று கிரகத்திற்கு மனிதர்கள் செல்வதால் ஏற்படும் விளைவுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

படத்தின் பிரமிக்க வைக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள், சென்டிமெண்ட் என அனைத்தும் வேற லெவெலில் இருந்ததால் வசூலை வாரிக் குவித்தது.

இந்நிலையில், சரியாக 13 ஆண்டுகள் கழித்து அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இரண்டாம் பாகத்திற்கு “அவதார்: தி வே ஆப் வாட்டர்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகள் உள்பட, உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அவதார் படத்தின் முதல் பாகம் காடுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் பாகம் தண்ணீரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு படத்தின் முதல் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிறச் செய்த நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது.

நமது கற்பனைக்கு எட்டாத வகையில், முழுக்க முழுக்க கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் கடல் உயிரினங்களுடன் தண்ணீருக்குள் இருக்கும் உலகை நம் கண் முன்னே கொடு வந்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன். மேலும் முதல் பாகத்தை போலவே, சென்டிமெண்ட், காதல் மற்றும் சண்டை என அனைத்தும் கலந்த மசாலாவாக படம் இருக்கும் என்பது டிரெயிலரை பார்க்கும் போதே தெரிகிறது.

250 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தயாராகியுள்ள இந்த படம் வெளியாகும் முதல் வாரத்திலேயே 600 மில்லியன் டாலருக்கும் மேல் வசூலித்து விடும் என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top