Connect with us

“புஷ்பா-ன்னா ஃபிளவருன்னு நெனச்சீங்களா!” ஜடேஜா செஞ்ச சம்பவம்! Viral வீடியோ!

IPL

“புஷ்பா-ன்னா ஃபிளவருன்னு நெனச்சீங்களா!” ஜடேஜா செஞ்ச சம்பவம்! Viral வீடியோ!

ஐபிஎல் போட்டிகள் துவங்க இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பயிற்சியின்போது ஜடேஜா செய்த காரியத்தால் ரசிகர்கள் படுகுஷியாகிவிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர்.

கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியுடனான போட்டி முடிவடைந்துள்ளதால் ஜடேஜா CSK அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல, இங்கிலாந்து அணியின் மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் சென்னைக்கு வந்திருக்கின்றனர். ராயுடு, சஹார் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக்கான ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்து வருகின்றனர். சில தினங்கள் முன்னிலையில் சென்னை மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஜடேஜா, புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் போல தாடையை தடவ, அங்கிருந்த ரசிகர்கள் ஆராவரம் செய்கின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வர்ணனையாளர்கள் அறிவிப்பு!"

More in IPL

To Top