Connect with us

2023 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெருகிறாரா தோனி..? பேட்டியில் சுவாரஸ்ய பதில் கொடுத்த ரோகித் சர்மா…

Featured

2023 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெருகிறாரா தோனி..? பேட்டியில் சுவாரஸ்ய பதில் கொடுத்த ரோகித் சர்மா…

நடப்பாண்டுக்கான (2023) ஐபிஎல் தொடர் நாளை மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட 10 சிறப்பான தரமான அணிகள் பங்கேற்கின்றன.

இந்த தொடரின் முதல் போட்டியில் ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது .

இந்த தொடர் சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு கடைசி தொடராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் சென்னை அணியின் போட்டிகளை ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் எம் எஸ் தோனி இன்னும் 2 அல்லது 3 சீசன் வரை ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என இந்திய அணியின் கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா கூறியுள்ளார்.

தோனியின் கடைசி சீசன் இதுவாக இருக்கும் என்று கடந்த சில ஆண்டுகளாக நான் கேள்விப்பட்டு வருகிறேன். ஆனால் இன்னும் சில சீசன்களில் விளையாடும் அளவுக்கு அவர் பூரண உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று ஹிட் மேன் ரோகித் சர்மா கூறியுள்ளார் .

இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு முக்கிய மைதானங்களில் கோலாகலமாக நடைபெற இருக்கும் இந்த போட்டிகளின் முடிவில் எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது எந்த அணி மோசமான தோல்விகளை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரபல பாடகி மீது துப்பாக்கிச் சூடு... அதிர்ந்த ரசிகர்கள்...

More in Featured

To Top