Connect with us

சின்ன பட்ஜெட் படங்கள் தான் தமிழ் சினிமாவிற்கு முதுகெலும்பு…!தயாரிப்பாளர் சொல்லிய தகவல்..

Cinema News

சின்ன பட்ஜெட் படங்கள் தான் தமிழ் சினிமாவிற்கு முதுகெலும்பு…!தயாரிப்பாளர் சொல்லிய தகவல்..

நடிகர்கள் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உட்பட பலர் நடித்துள்ள படம் தான் இறுகப்பற்று…இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரகாரன் இசை அமைத்துள்ளார் கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்…பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படம் அக்.6ம் தேதி வெளியாகிறது இது ஒரு காதல் கதை என்று தெரிகிறது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது கூறியதாவது பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் உருவாக்கும் ஒவ்வொரு படமும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறோம் என்பதை நாங்கள் முடிவில் வைத்துள்ளோம்.

மல்டி ஸ்டார் படம் தயாரிப்பது என்பது தயாரிப்பாளருக்கு கஷ்டமான விஷயம் அதை அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும்…யார் மனமும் கோணாமல் படத்தை எடுக்க வேண்டும் அதை ‘இறுகப்பற்று’ படத்தில் அழகாகச் செய்திருக்கிறார் இயக்குநர் யுவராஜ் அவர்கள்.

கடந்த சில நாட்களாக சின்ன பட்ஜெட் படங்கள் பற்றி விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது இதையும் சிறு பட்ஜெட் படமாகத்தான் பார்க்கிறேன் சின்ன படங்களும் சினிமாவைத் தாங்கிதான் பிடிக்கின்றன….அவை சினிமாவை பெரிய இடத்திற்கு தான் கொண்டு செல்கின்றன…

சிறு பட்ஜெட் படங்கள் முக்கியம் தான் ஆனால் அவற்றுக்கென வியாபாரம் இருந்ததில்லை சிறு பட்ஜெட் படங்கள் அதிகம் வருகின்றன இதனால் தொழிலாளர்களுக்கு அதிக பணம் கிடைக்கிறது சிறுபடங்கள் தான் சினிமாவின் முதுகெலும்பு என்று பேசியுள்ளார் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அவர்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும்! நடிகர் சமுத்திரக்கனி வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு!"

More in Cinema News

To Top