Connect with us

என்ன நண்பா ரெடி யா!!ஐபிஎல் 2023 தொடக்க விழா குறித்த அப்டேட்..

Featured

என்ன நண்பா ரெடி யா!!ஐபிஎல் 2023 தொடக்க விழா குறித்த அப்டேட்..

15 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 16ஆவது சீசன் ஐபிஎல் போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துவிட்டது.

ஐபிஎல் 16ஆவது சீசனின் முதல் போட்டி வரும் மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது.

வழக்கம் போல், நடப்பு சாம்பியன் முதல் போட்டியில் இறங்குகிறது. கடந்த முறை கோப்பை வென்ற ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. மார்ச் 31 வெள்ளிக்கிழமை நடைபெறும் முதல் போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டி தொடங்கும் முன்பு, கண்கவர் தொடக்க விழா நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

ஐபிஎல் போட்டிக்கான எதிர்பார்ப்பு ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டே இருக்கிறது. இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் எங்கே நடைபெறுகிறது. தொடக்க நாள் நிகழ்வு எங்கு நடக்கிறது. எப்போது நடக்கிறது என கேட்போருக்கு அதன் பதில் இதோ… ஐபிஎல் தொடக்க விழா வரும் மார்ச் 31ஆம் தேதி சீசனின் முதல் போட்டிக்கு முன் குஜராத் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தொடக்க விழாவில் திரைப்பிரபலங்களும் கலந்து கொள்வார்கள். அதன்படி இந்தாண்டு ஐபிஎல் தொடக்க விழாவில் ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னா உள்ளிட்டோர் நடனமாட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தவிர கத்ரீனா கைஃப், டைகர் ஷ்ராஃப் மற்றும் அரிஜித் சிங் ஆகியோரின் நிகழ்ச்சிகளும் தொடக்க விழாக்களில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஸ்டார் நெட்வொர்க் சேனலிலும், ஜியோ ஓடிடி தளங்களிலும் ஒளிபரப்பாக உள்ளது.

ஐபிஎல் போட்டிகளுக்கு மிகப் பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. முதல் போட்டிக்குப் பிறகு மூன்று நாட்கள் கழித்து, சென்னை அணி தனது இரண்டாவது போட்டியில் லக்னோ அணியை சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை சமீபத்தில் தொடங்கியது.

வெறும் அரை மணி நேரத்தில் ஆன்லைன் டிக்கெட் விற்றுத் தீர்ந்த நிலையில், ஸ்டேடியத்தில் வழங்கப்படும் டிக்கெட்களும் ஓரிரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது. இதுவே ஐபிஎல் தொடரை மக்கள் எந்தளவுக்கு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாகும்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் விஜய்யை கடுமையாக திட்டிய சங்கீதா..காரணமே இவரோட திருமணம் தான்!

More in Featured

To Top