Connect with us

அடி தூள்..ஐ.பி.எல். தொடக்க விழாவில் பங்கேற்கும் பிரபல நடிகர் மற்றும் நடிகைகள்..! வெளியான டக்கர் தகவல்

Featured

அடி தூள்..ஐ.பி.எல். தொடக்க விழாவில் பங்கேற்கும் பிரபல நடிகர் மற்றும் நடிகைகள்..! வெளியான டக்கர் தகவல்

நடப்பாண்டுக்கான (2023) ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட 10 சிறப்பான தரமான அணிகள் பங்கேற்கின்றன.

இந்த தொடரின் முதல் போட்டியில் ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது .

பொதுவாக ஐ.பி.எல் தொடக்கவிழாவில் சில பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று . இதில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பார்கள் .

அந்தவகையில் இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடக்கவிழாவில் பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா பங்கேற்பதாக ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அவருடன் சேர்ந்து மேலும் பல திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பல்வேறு முக்கிய மைதானங்களில் கோலாகலமாக நடைபெற இருக்கும் இந்த போட்டிகளின் முடிவில் எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது எந்த அணி மோசமான தோல்விகளை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி…

More in Featured

To Top