Connect with us

IPL 2023 : ரிஷப் பண்டிற்கு பதிலாக டெல்லி அணியில் இணைந்த இளம் வீரர்..! முழு விவரம் இதோ…

Featured

IPL 2023 : ரிஷப் பண்டிற்கு பதிலாக டெல்லி அணியில் இணைந்த இளம் வீரர்..! முழு விவரம் இதோ…

இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் பல நட்சத்திர வீரர்களில் ஒருவராக வலம் வருபவர் ரிஷப் பண்ட் . இந்திய அணிக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல சாதனைகளை படைத்துள்ள ரிஷப் பண்ட் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேனாக களத்தில் கலக்கி வந்தவர் .

இதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் இருக்கும் சிறந்த அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் . எல்லாம் நல்லபடி செல்ல கடந்த டிசம்பர் மாதம் நடந்த கார்விபத்தில் சிக்கி படக்காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் இளம் வீரர் ரிஷப் பண்ட் .

இந்த விபத்தால் ஏற்பட்ட முழங்கால் காயத்துக்கு ஆபரேஷன் செய்து காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக அவரால் இந்த சீசனில் விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளது .

இந்நிலையில் நடப்பாண்டுக்கான டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக இந்திய ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார் .

இதைத்தொடர்ந்து தற்போது இளம் வீரர் ரிஷப் பண்ட் இடத்தை இளம் வீரர் அபிஷேக் போரல் நிரப்புகிறார். 25 வயதாகும் போரல், முதல் தர கிரிக்கெட்டில் கடைசியாக விளையாடிய 26 இன்னிங்சில் 6 முறை அரைசதம் விளாசி பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.

ரிஷப் பண்ட்க்கு பதிலாக பெங்கால் இளம் வீரர் அபிஷேக் போரல் டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ள அபிஷேக் போரல், அணியின் பயிற்சி போட்டிகளில் பங்கேற்றுள்ளாராம்.

பெங்கால் உள்ளூர் கிரிக்கெட் போட்களில் சிறப்பான கீப்பிங் மற்றும் பேட்டிங் மூலம் கலக்கி வந்த இளம் வீரர் போரலை, இந்த சீசன் முழுவதும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறக்க டெல்லி அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறித்து .

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் வார்னர் தலைமையிலான டெல்லி அணி தனது முதல் போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை ஏப்ரல் 1 ஆம் தேதி எதிர்கொள்கிறது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் நிறைய மாற்றங்களுடன் புதிய உத்வேகத்துடன் களம் காண இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டுமா அல்லது பலவீனத்துடன் பணியுமா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  WTC Final 2023: "கோலியின் Form ஆஸ்திரேலிய அணிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!" ரிக்கி பாண்டிங் கருத்து!

More in Featured

To Top