Connect with us

“லக்னோவை வீழ்த்தி Qualifier 2 போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் முன்னேற்றம்!”

Ipl 2023

“லக்னோவை வீழ்த்தி Qualifier 2 போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் முன்னேற்றம்!”

எலிமினேட்டர் மேட்ச்சில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் குவாலிபையர் 2 ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது. வெள்ளியன்று நடைபெறவுள்ள இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ். இந்த மேட்ச்சில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா களத்தில் இறங்கினர். மும்பை அணிக்கு மிக முக்கியமான இந்த ஆட்டத்தில் இஷான் கிஷன் 15 ரன்னும், ரோஹித் சர்மா 11 ரன்னும் எடுத்து மோசமான தொடக்கத்தை கொடுத்தனர். அடுத்து வந்த கேமரூன் கிரீன் மற்றும் சூர்யகுமார் இணை தொடக்க சரிவில் இருந்து அணியை மீட்டெடுத்து 3 ஆவது விக்கெட்டிற்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

கிரீன் 23 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 6 பவுண்டரியுடன் 41 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் சேர்க்க, அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் 13 ரன்கள் ஏமாற்றம் அளித்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 182 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர்.

தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 18 ரன்னிலும், ப்ரேரக் மன்கட் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் க்ருணல் பாண்ட்யா 8 ரன்னும், ஆயுஷ் பதோனி 1 ரன்னும், நிகோலஸ் பூரன் ரன் ஏதும் எடுக்காமலும் நடையைக் கட்டினர். இதனால் 9.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 74 ரன்ளுடன் தடுமாறியது. விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் தொடர்ந்து லக்னோ அணிக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டே இருந்தார்.

40 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டாய்னிஸ் டிம் டேவிட்டினால் ரன் அவுட்டாகி வெளியேறினார். தீபக் ஹூடா 15 ரன்கள் எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 16.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ அணி 101 ரன்கள் மட்டுமே எடுத்து 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இன்றைய போட்டியில் மும்பை அணியின் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் அற்பதமாக அமைந்தது. மும்பை அணி வீரர்கள் 3 ரன் அவுட் செய்துள்ளனர். அந்த அணியின் ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்கள் வீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

See also  World Test Championship: "ICC பகிர்ந்த ரோகித் சர்மாவின் சிறப்பு Poster!"

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Ipl 2023

To Top