Connect with us

IPL 2023 : சென்னை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் தொடரில் இருந்து விலகல்..! ஆரம்பமே சறுக்குதே..

Featured

IPL 2023 : சென்னை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் தொடரில் இருந்து விலகல்..! ஆரம்பமே சறுக்குதே..

நடப்பாண்டுக்கான (2023) ஐபிஎல் தொடர் நாளை மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதரபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட 10 சிறப்பான தரமான அணிகள் பங்கேற்கின்றன.

இந்த தொடரின் முதல் போட்டியில் ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது .

இந்நிலையில் கடந்த சீசனில் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சவுத்ரி, காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.

கடந்த 2022 ஐபிஎல் தொடரில் தனது அபார பந்துவீச்சால் எதிரணியை துவம்சம் செய்து சென்னை அணிக்காக முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் முகேஷ் சவுத்ரி .

சென்னை அணியின் நம்பிகை நட்சத்திரமாக வலம் வந்த இவர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருப்பது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில் முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக நாகலாந்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங்கை மாற்று வீரராக சென்னை அணி நிர்வாகம் தீவிர ஆலோசனைகளுக்கு பின் அறிவித்துள்ளது.

சில பல மாற்றங்களுடன் புதிய உத்வேகத்துடன் களம் காண இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டுமா அல்லது பலவீனத்துடன் பணியுமா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஃப்ரெஞ்ச் ஓபன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்…

More in Featured

To Top