Connect with us

இந்திய அணியின் சோகமான நிலையை மாற்ற போகும் அந்த போட்டியாளர் யார்??

Featured

இந்திய அணியின் சோகமான நிலையை மாற்ற போகும் அந்த போட்டியாளர் யார்??

இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

Ishan Kishan opens India's eyes to new age of batting | Cricket - Hindustan  Times

கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அடுத்த மாதம் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அவர் தவற விடுகிறார்.இதனால் பல கிரிக்கெட் வீர்கள் சோகத்தில் உள்ளனர் அந்த அளவு நல்ல பிளேயர் இந்த பந்த்.

இதே போல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனான அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் விளையாடுவது சந்தேகம் தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான ரன் குவிப்பில் மிரட்டும் 25 வயதான ரிஷப் பண்ட் முக்கியமான தொடரில் விளையாட முடியாமல் போவது இந்திய அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான்.

அதுபோல அவரின் முக்கிய ஆட்டம் டெல்லி அணிக்கு தேவையாக இருக்கும் ஆனால் இப்போது அவர் விளையாட வாய்ப்பு குறைவுதான்.

அத்துடன் புதிதாக நியமிக்கப்பட உள்ள இந்திய தேர்வு கமிட்டிக்கு, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு இரண்டு புதிய விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்வது மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கும்.

அவரது இடத்திற்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், இந்தியா ஏ அணியின் மாற்று விக்கெட் கீப்பர் உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது. இஷான் கிஷனை பொறுத்தவரை தொடர்ச்சியாக முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை.அதனால் கே.எஸ்.பரத்துக்கு அதிக வாய்ப்புள்ளது.பொறுத்து இருந்து பாப்போம் யார் வந்து அந்த இடத்தை நிரப்பி காப்பாற்ற போகிறார் என்று.

Keeper of faith: From ball boy to India A regular, KS Bharat quietly stakes  his claim | Sports News,The Indian Express

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top