Connect with us

இந்த கிரிக்கெட் வீரருக்கு டும் டும் டும்…ஸ்பெஷல் போட்டோ இதோ..

Featured

இந்த கிரிக்கெட் வீரருக்கு டும் டும் டும்…ஸ்பெஷல் போட்டோ இதோ..

மகள் அதியா ஷெட்டிக்கும், இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலுக்கும் மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள தனது வீட்டில் வைத்து வரும் 23 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ள நிலையில், சுனில் ஷெட்டி வீட்டை அலங்கரித்துள்ளார்.அந்த போட்டோ வைரலாகி வருகிறது..

இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர்.அதனை பல முறை அவரே உறுதிசெய்தார்..

இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கே எல் ராகுலுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதியா ஷெட்டியுடன் நேரம் செலவிட்டு வந்துள்ளார். இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், வரும் 23 ஆம் தேதி கே எல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி ஆகியோருக்கு திருமணம் நடக்க இருக்கிறது.

திருமணத்திற்கு முன்னதாக 21 ஆம் தேதி சங்கீத் நிகழ்ச்சியும், மெஹந்தி நிகழ்ச்சியும் நடக்கிறது. அதியா ஷெட்டியின் சகோதரர் மற்றும் பெற்றோர்களும் இந்த சங்கீத நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அது போல கல்யாணத்துக்கு ரெடியும் செய்கின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top