Connect with us

தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய ஹாக்கி அணி..ஜப்பானை வீழ்த்தி வரலாற்றை படைத்த இந்தியா!

Sports

தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய ஹாக்கி அணி..ஜப்பானை வீழ்த்தி வரலாற்றை படைத்த இந்தியா!

பெரிதும் எதிர்பார்த்த சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது…இதனை பல இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்…

12ஆம் நாள் முடிவில் இந்தியா தரப்பில் 21 தங்கம்,32 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் என்று மொத்தமாக 86 பதக்கங்களை வென்றுள்ளது….அதனால் மிகவும் பெருமை வாய்ந்து வருகிறது…இந்த நிலையில் ஆடவர் ஹாக்கி பிரிவில் இந்திய அணி இறுதிப்போட்டியில் ஜப்பான் அணியை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்திய அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.முதல் 15 நிமிடங்களில் இரு அணிகளும் எந்த கோலுமே அடிக்காத நிலையில்…இரண்டாவது குவார்ட்டரில் இந்திய அணியின் மன்ப்ரீத் சிங் முதல் Goal-ஐ அடித்து அசத்தினார் தொடர்ந்து 3வது குவார்ட்டரில் இந்திய அணி 2வது கோலை அடித்து சாகசம் செய்தது.

தொடர்ந்து இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னரையும் கோல் அடிக்க 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.தொடர்ந்து கடைசி குவார்ட்டரில் இந்திய அணியின் அபிஷேக் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் அடுத்தடுத்து கோல் அடிக்க ஜப்பான் அணி ஒரு கோல் மட்டும் அடித்தது.

இதன் மூலம் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று தங்கத்தை வென்றது.இதற்கு முன்பு 1966, 1998 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு பின் இந்தியா 4வது முறையாக ஆசிய போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது…இது மிகவும் விமர்சையாக இப்போது மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காதலியை கொன்றுவிட்டு ஸ்டேட்டஸ் வைத்த கொடூர காதலன் - சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

More in Sports

To Top